பக்கம் எண் :

5238.

     இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே
          இசைகிளர் துதியே துதிகிளர் இறையே
     செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே
          திருநட மணியே திருநட மணியே.

உரை:

     இயல் கிளர் மறையே மறைகிளர் இசையே இசைகிளர் துதியே துதிகிளர் இறையே - பலவேறாகப் பிரிந்தியலுகின்ற வேதங்கள் உரைக்கின்ற இசைமயமானவனே.

     (13)