பக்கம் எண் :

524.

    மாமயி லேறி வருவாண்டி - அன்பர்
        வாழ்த்த வரங்கள் தருவாண்டி
    தீமை யிலாத புகழாண்டி - அவன்
        சீர்த்தியைப் பாடி யடியுங்கடி.

உரை:

     தீமை யிலாத புகழ் - தன்னை யோதுவதால் ஓதுவோர் எவர்க்கும் ஒரு தீங்கும் இல்லாமற் செய்யும் புகழ். சீர்த்தி - மிகுபுகழ்.

     (2)