பக்கம் எண் :

5250.

     ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே
          ஆகம மேலவனே ஆரண நாவலனே
     நாடிய காரணனே நீடிய பூரணனே
          ஞான சபாபதியே ஞான சபாபதியே.

உரை:

     ஞான நாடகம் ஆடுபவனே; ஜனகர், ஜனத்குமாரர். ஜனானந்தர் முதலிய பெருமக்களுக்கு உபதேசித் தருளிய குருவே; ஆகமங்களுக்கெல்லாம் மேலான பொருளானவனே; நான்காகிய வேதங்களை உடையவனே; எல்லாப் பொருள்கட்கும் காரணமாக உள்ளவனே; எல்லாவற்றிலும் கலந்திருக்கும் பரம்பொருளானவனே.

     (10)