பக்கம் எண் :

119. விரைசேர் சடையாய்

சிந்து

    அஃதாவது, மணம் கமழும் சடையை உடையவன் என்று தொடங்குவதால் இப்பெயர் உடையதாயிற்று. விரை - மணம்.

5251.

     விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
          விகிர்தா விபவா விமலா அமலா
          வெஞ்சேர் பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.

உரை:

     விகிர்தா - விளையாடுபவனே. விபவா - சிறந்த ஒளியுடன் தோன்னுபவனே. விமலா - மலம் இல்லாதவன். அமலா - மலம் அகன்றவனே. வெவ்விய பசிக் கொடுமைக்கு அஞ்சாமல் பஞ்சு போன்ற நஞ்சினைக் கண்டு அஞ்சாத எந்தையே; ஞான சபைத் தலைவனே.

     (1)