5256. வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி
உரை: வாம சோதி - சிவத்தின் இடப்பாகத்தே உள்ள சோதி மயமான சோதி. சோம சோதி - யோக சந்திர சோதி. வான சோதி - வானத்தில் விளங்குகின்ற சோதிப் பொருளே; ஞான சோதி - ஞான மயமான சோதி; மாக சோதி - மேலுலகத்தில் விளங்குகின்ற சோதி; யோக சோதி - யோகிகளுக்குத் துவாத சந்திர ஸ்தானத்தில் விளங்குகின்ற சோதியே; வாத சோதி - வாத ஞானிகளுக்கு வாத ஞானமாக உள்ளவனே; நாத சோதி - நாத தத்துவத்தில் சோதியாக விளங்குபவனே. ஏம சோதி - எல்லா உயிர்களுக்கும் ஆதரவான சோதி; வியோம சோதி, மாயப் பாழ் வியோமப் பாழ் முதலிய பாழ்களுக்கு மேலான மூர்த்தியே; ஏறு சோதி - மேன்மேலும் எழுகின்ற விளக்கமே; வீறு சோதி - நிகரற்று மேன்மேலும் விளங்கும் சோதி; ஏக சோதி - எல்லாம் தனக்குள்ளே உடைய ஏக சோதியே. (2)
|