5257.
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே வாதிஞான போதனே வாழ்க வாழ்க நாதனே.
உரை:
ஆதியாக உள்ள உயர்ந்த வேதப் பொருளே; திருநடனம் புரிகின்ற பாதத்தை உடையவனே; வாதங்கள் புரிகின்ற ஞான யோகிகளுக்கு ஞானம் அருளுபவனே; நீ வாழ்வாயாக. (3)
(3)