பக்கம் எண் :

5261.

     ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
          ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
     தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
          தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.

உரை:

     ஈசன் திருவருளால் எனக்கொரு ஓடம் வாய்த்தது; அதன்கண் ஏறிக் கரையேறினேன்; அங்கே ஒரு மாடம் இருந்தது; விளக்கம் மிகுந்த அம்மாடத்தின் நடுவே தெய்வ மணி ஒளி ஒன்று கண்டேன்; கண்டவுடனே எனக்குச் சந்தோஷம் உண்டாயிற்று.

     (4)