122. ஊதூது சங்கே
தாழிசை
அஃதாவது, வெற்றி கொள்பவர் அதற்கு அடையாளமாக வெற்றிச் சங்கு ஊதுவர். அச்செய்தியையே பாட்டில் வைத்து இராமலிங்க சுவாமிகள் பாடுகின்றார். இப்படி இப்படி ஊதவேண்டும் எனப் பின்னர் வரும் பாட்டுக்களில் கூறுகின்றார். 5269. கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே
கனக சபையான்என்று ஊதூது சங்கே
பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே
பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.
உரை: கனக சபையான் கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே; பொய் ஒழுக்கத்தைக் கைவிடச் செய்தாய் என்று சங்கே ஊதுவாயாக. (1)
|