5270. தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே
ஏம சபையான்என்று ஊதூது சங்கே.
உரை: சோம்பிச் செய்தலை நீக்கி விட்டாய் என்று சங்கே ஊதுவாயாக; என் மனத்திருந்த ஏக்கத்தைக் கெடுத்தான் என்று சங்கே ஊதுவாயாக; பொற் சபையான் என்று ஊதுவாயாக. (2)
|