பக்கம் எண் :

5271.

     பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே
          பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே
     இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே
          என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே

உரை:

     தனது அழகிய திருவடியைத் தந்தான் என்று சங்கே ஊதுவாயாக; பொன்னம்பலத்தைத் தந்தான் என்று ஊதுவாயாக; என் துன்பங்களைப் போக்கினான் என்று ஊதுவாயாக; என் உள்ளத்தில் அமர்ந்திருக்கின்றான் என்று ஊதுவாயாக.

     (2)