5284. பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே
புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
மெய்தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே
மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.
உரை: பொய்ந்நெறியைக் கைவிட்டு நீங்கினேன் என்று சங்கே ஊதுவாயாக; நான் புண்ணியன் ஆகிவிட்டேன் என்று ஊதுவாயாக; மெய்ம்மைப் பொருளைத் தொட்டுக்கொண்டு நிற்கின்றேன் என்று ஊதுவாயாக; எல்லாத் தத்துவங்களுக்கும் மேலாகிய வியோம வெளியையும் கண்டேன் என்று சங்கே ஊதுவாயாக. (16)
|