பக்கம் எண் :

5286.

     சிற்சபையைக் கண்டோம்என்று சின்னம் பிடி
          சித்திகள்செய் கின்றோம் என்று சின்னம் பிடி
     பொற்சபை புகுந்தோம்என்று சின்னம்பிடி
          புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.

உரை:

     ஞான சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடிப்பீர்களாக; கன்ம யோக ஞான சித்திகள் யாவையும் செய்கின்றோம் என்று சின்னம் பிடிப்பீர்களாக; பொற் சபையைக் கண்டோம் என்றும் புந்தி மகிழ்கின்றோம் என்றும் சின்னம் பிடிப்பீர்களாக.

     (2)