பக்கம் எண் :

5290.

     தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
          சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
     ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
          ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.

உரை:

     சிவமாகவே நான் ஆயினேன் இது சத்தியம் என்று சின்னம் பிடிப்பீர்களாக; என் உடலுக்குள் புகுந்து சிவம் விளங்கிற்று என்றும் அதனால் என் உடல் ஒளி வண்ணமானது என்றும் சின்னம் பிடிப்பீர்களாக.

     (6)