5294. சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
இதுவே தருணம்என்று சின்னம் பிடி.
உரை: சிவபெருமான் ஞான யோக கரும சித்தாடுகின்றார் என்றும் அவர் அருளால் செத்தவர்கள் எழுவார்கள் என்றும் இப்பூமியில் அவர்கள் என்றும் எழுந்து நிலவுவார்கள் என்றும் இதுவே சமயமாகும் என்றும் திருச்சின்னத்தைப் பிடிப்பீர்களாக. (10)
|