539. சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
சண்முக நாதரே வாரும்
உண்மை வினோதரே வாரும்.
உரை: விடியற் காலையில் சங்கொலித்தல் மரபாதலின், “சங்கம் ஒலித்தது” என்கிறார். “இயம்பின சங்கம்” என்பது திருவாசகம். தாழ் கடல் - ஆழ்ந்தகடல். விம்முதல் - அலை மிகுதல். மெய்ம்மை நிறைந்த உள்ளத்தில் இன்பம் மிகுவிக்கும் இயல்பினராதலின் முருகப்பெருமானை “உண்மை வினோதர்” என்று சொல்கின்றார். (2)
|