540.
பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று பொன்னான வேலரே வாரும் மின்னார்முந் நூலரே வாரும்.
உரை:
பொற் கோழி - அழகிய கோழி. பொன்னான வேலர்-பொன்மை நிறம் திகழும் வேலை யுடையவர். முந்நூல்-பூண் நூல். (3)
(3)