1428. அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ்
ஞானம் அடைந்துவிண்ணில்
பண்டாரை சூழ்மதி போலிருப்
போர்கள்நின் பத்தர்பதம்
கண்டாரைக் கண்டவர் அன்றோ
திருவொற்றிக் கண்ணுதல்சேர்
வண்டாரை வேலன்ன மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: அழகிய ஒற்றியூர் உறையும் கடவுளின் செம்பாதியாய் வற்றாத கருணைக் கடலாக வுள்ள அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, அடியவர் போந்து இடையறாது வழிபட்ட வண்ணமிருக்கும் நின் திருவடியில் ஒட்டிய பொடி சிறிது தோயப்பெற்ற முடியைச் சூடுவதால் தங்கள் திருவடிக்கும் பெருமையுண்டாகப் பெற்றனர் அந்தத் திருமால் பிரமன் ஆகியோரும், அவர்க்கு முன்னையோரும். எ.று.
தென் - அழகு. கடவுள் என்றது, சிவபெருமானை. பிறவா இறவாப் பிறிதொன்றும் நிகராப் பரம்பொரு ளொன்றுக்கேயுரிய கடவுள் என்ற சொல்லை, சொற்பொருட் சிறப்பு நோக்கும் நற்பண்பை யிழந்தமையால் புலவர்கள் பன்னெடுங்காலமாக செத்துப் பிறக்கின்ற சிறு தெய்வங்கட்கும்
வழங்கிச் சீர்குலைந்தனர்; குலைகின்றனர். மண்ணகத்து மக்களையும் விண்ணகத்துத் தேவர்களையும் கடவுள் என்று குறிக்கும் மரபு கழுவாய் காணப்படாத வழுவாகும். செம்பால் - செம்பாகம். இந்நாளில் சரிபாதி என்பது. தரத்தரக் குறைதல் இல்லாத அருட்கடல் என்றற்கு “வடியாக் கருணைக்கடல்” என வுரைக்கின்றார். அம்பிகையின் திருவடி அடியாரால் எந்நாளும் எப்போதும் வணங்கப்படும் மாண்புடைமை பற்றி, “அடியார் தொழும் நின் அடி” என்றும், அதன்கண் ஒட்டிய சிறு பொடி, முடியணிந்த தலையோடு வணங்குமிடத்து அம்முடிக்கண் ஒட்டிக் கொள்ளுமது தோன்ற, “பொடிதான் சற்று அணியப் பெற்ற முடியால்” எனவும் மொழிகின்றார். தேவர்கள் சிவனைக் காண்டற்குத் தலையில் அணிந்து வரும் முடியை, கண்டுவணங்கும்போது எடுக்காமல் அம் முடியோடேயே வணங்குகின்றார்கள் என்பதனை, “அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை” (திருவெம்) என்று கூறும் திருவாசகம். பொடிதோய்ந்த முடியணிதலால் திருமால் அயன் முதலியோர் திருவடி, தம்மை வணங்குவோர்கட்கு நலம் பயக்கும் செம்மையுடையதாயிற்றென்றும், அதனைப் பெற்றுத் தந்த பெருமை அவர்கட்குரியதென்றும் கூறுவாராய் “முடியாலடிக்குப் பெருமை பெற்றார் அம்முகுந்தன் முதலியோர்” என்று மொழிகின்றார். சந்தக்கடியார் மலர் - அழகும் மணமும் உடைய தாமரை. நாரணரும் பிரமரும் பலருண்டெனப் புராணம் கூறலால் “முன்னோர்” என உரைக்கின்றார்.
இதனால், அம்பிகையின் திருவடியைத் திருமால் முதலிய தேவர்கள் தலையில் அணிந்த முடியோடு வீழ்ந்து வணங்கும்போது, முடிக்கண் திருவடியில் ஒட்டிய பொடி தோய்தலால், அவர்களுடைய திருவடிகள் தம்மை வணங்குவோர்க்கு நன்மை பயக்கும் செம்மையுடையவாயின என்பதாம். (43)
|