1431.

     இட்டார் மறைக்கும் உபநிட
          தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
     எட்டாநின் பொன்னடிப் போதெளி
          யேன்தலைக் கெட்டுங்கொலோ
     கட்டார் சடைமுடி ஒற்றிஎம்
          மான்நெஞ்ச கத்தமர்ந்த
     மட்டார் குழன்மட மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      எளியவர்க் கெளியவராய்த் திருவொற்றியூரில் உள்ள சிவபிரானுடைய மெய்யிடத்தே நன்கு பரிமளித்தோங்கும் நறுமணமாகிய வடிவுடை மாணிக்கமே, நிலமுதல் வான மீறாக வுள்ள ஐம்பெரும் பூதங்கட்கும் இடம் தரும் பூத வெளியாய், அதற்குள் உள்ளீடொன்றுமில்லாத வெறு வெளியாகவும், சிவமாம் தன்மை கலந்த ஒளியாகவும், அந்த ஒளிக்குள் அருளொளியாகும் பரை என்னும் சத்தியாவும் விளங்கும் நினக்கு நிகராவார் யாவருளர்? நிகராவாரும் இல்லை; மேலாவாரும் இல்லை. எ.று.

     எளியார்க்கு எளியனாய் வாரானாயின் அவனை அறிந்து பரவுவார் இல்லையாம் என்பது கருத்துட்கொண்டே, எளிவந்து, அன்பர் எடுக்கும் கோயில்தொறும் இடம் கொண்டு அருளிகின்றார். “எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என்னப்பன்” (நீத்தல்) என்று திருவாசகம் உரைப்பது காண்க. பொன்மலையிற் பச்சைக்கொடி படர்ந்தது போல் சிவத்தின் திருமேனியில் அம்பிகையின் உருவம் கலந்திருத்தலால், அவளது மேனிக்கண் கமழும் இயற்கைத் தெய்வமணம் அவர் படர்ந்து கமழ்வது கண்டே, “மெய்யினிது பரிமளியா நின் றோங்கும் மருவே” என மகிழ்ந்துரைக்கின்றார்.

      இதனால் வடிவுடை மாணிக்கமான அம்பிகை, வெறு வெளியாய், ஒளிக்குள் ஒளியாம் பரை யாவாள், அவட்கு நிகராவார் ஒருவரும் இலர் என்பதாம்.

     (46)