1437.

     எழுதா எழில்உயிர்ச் சித்திர
          மேஇன் இசைப்பயனே
     தொழுதாடும் அன்பர்தம் உட்களிப்
          பேசிற் சுகக்கடலே
     செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம்
          மான்தன் திருத்துணையே
     வழுவா மறையின் பொருளே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      தெளிவுப் பகுதிக்கண் நின்று அங்கைச் சுட்டுவிரலால் பரமனைக் காட்டும் செல்வராகிய ஞானசம்பந்தர்க்கும் என்று மாறா இளைஞராகிய முருகவேட்கும் மனம் மகிழ்ச்சியுடன் அருளாகிய பாலை வழங்கும் கொங்கைகளையுடைய செல்வமாய், எங்கள் மனத்திற் படிந்த இருட்பகுதியை நீக்கும் பெரிய சுடராய், திருவொற்றியூர் உறையும் எந்தையாகிய சிவனுடைய திருவுள்ளத்துக் கொப்ப மருட்பால் பயில்கின்ற மயிலாய் விளங்குபவள் அம்பிகையான வடிவுடை மாணிக்கம். எ.று.

     தெருள் - தெளிவு. தெளிந்த சிந்தையுடன் நின்று “தோடுடைய செவியன்” என்று தன் சுட்டுவிரலால் காட்டிய ஞானச் செல்வரான திருஞான சம்பந்தரைத் “தெருட்பால் உறும் அங்கைச் செல்வர்” என்று கூறுகின்றார். “அந்தணன் முனிந்து தந்தார் யார் என, அவனைக் காட்டுவன் அப்பவானார், தோஒடுடைய செவியன் என்றும், பீஇடுடைய பெம்மான் என்றும் கையில் சுட்டிக்காட்ட, ஐயநீ வெளிப்பட்டருளினையாங்கே” (கழு. மும். 1) எனப் பட்டினத்தடிகள் பாடுவது காண்க. அருட்பால் - ஞானப்பால். தனத்தனம் - தனங்களையுடைய தனம்; முன்னது கொங்கை, பின்னது செல்வம். மனத்திடையே வந்து படியும் குற்றங்களாகிய இருள் அறக்கெடுப்பது பற்றி, “இருட்பால் அகற்றும் இருஞ்சுடரே” என்று குறிக்கின்றார். உயிரறிவு மாயா காரியவுலகில் தோய்ந்து மலவிருள் நீங்கப் பாகம் பெறற் பொருட்டு அதன்கட் படிந்து திருவருள் நெறியை மறைத்தலும், திருவருளில் தோய்ந்து சிவஞான வின்பம் நுகர்தற்பொருட்டு அதன்கட் படிந்து உலகியற் போகங்களை மறைத்தலும் ஆகிய இரண்டு மருட்செயல்களையும் இறைவன் திருவுள்ளப்படி இயற்றுவது பற்றி, “மருட்பால் பயிலும் மயிலே” என்று இயம்புகின்றார். இதனைச் செய்வது பற்றி. அம்பிகையைத் திரோதான சத்தி எனவும் இசைக்கின்றார்கள்.

     இதனால், வடிவுடை மாணிக்கம், தனத்தனம், இருஞ்சுடர், எந்தை யுள்ளத்தின்படி மருட்பால் பயிலும் மயில் என்றவாறாம்.

     (52)