1438. தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும்
நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்
தருட்பால் அளிக்கும் தனத்தன
மேஎம் அகங்கலந்த
இருட்பால் அகற்றும் இருஞ்சுட
ரேஒற்றி எந்தைஉள்ளம்
மருட்பால் பயிலு மயிலே
வடிவுடை மாணிக்கமே.
உரை: அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, திருவொற்றியூர்த் தலைவரான சிவனார் மலர்போன்ற கையில் ஏந்தும் பெறற்கரிய முத்துப் போல்பவளே, வேலேந்தும் பிள்ளையாகிய முருக வேட்கு நற்றாயே, இசையில் பழுத்த குரலிசையையுடைய குயில் போன்றவளே, கருமுகில் போன்ற மெல்லிய கூந்தலையுடைய பிடியானை போன்றவளே, மலையரசன் பெற்ற மயிலே, மதிபோன்ற முகமும் மான் போன்ற விழியுமுடையவளே. எ.று.
இப் பாட்டு அருச்சனை வடிவில் அமைந்ததாகும். இளமை வடிவினனாதல் பற்றி முருகனை “அயிலேந்தும் பிள்ளை” என்று உரைக்கின்றார். நம்பியாரூரரும் “அங்கை வேலான் குமரன்பிள்ளை” (ஓணகாந்) என்பது காண்க. அயில் - கூரிய வேற்படை. பெற்ற தாயை நற்றாய் என்பது வழக்கு. 'மலர்க்கையில்' என்றவிடத்து ஐகாரம் குறுகி மலர்க்கயில் என வந்தது. பெறற்கரும் முத்துப்போல்வது கொண்டு அரும்பெறல் முத்தென மொழிகின்றார். கனிந்து அமுதூறும் இன்னிசை வழங்குதலால், குயிலை “இசையிற் கனிந்த குரற்குயில்” என்று கூறுகின்றார். குயின் - மேகம். பிடியானை போலும் நடையுடைமை பற்றி, “பிடியே” என்கின்றார். மலைக்கோன் - மலையரசன். மதி முகமும் மான் விழியும் உடைமையால் “மதிமுக மானே” எனப் புகழ்கின்றார்.
இதன்கண், வடிவுடை மாணிக்கம், முருக வேட்கு நற்றாய், ஒற்றியூர்ப் பரமன் கையி லேந்திப் பரவும் முத்து, குயில், மென்குழற் பிடி, மயில், மதிமுகமான் என ஆர்வத்தாற் புகழப்பட்டவாறாம். (53)
|