1442. சேலேர் விழியருள் தேனே
அடியருள் தித்திக்கும்செம்
பாலே மதுரச்செம் பாகேசொல்
வேதப் பனுவல்முடி
மேலே விளங்கும் விளக்கே
அருளொற்றி வித்தகனார்
மாலே கொளும்எழில் மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமென்ற அம்பிகையே, எங்கள்பால் அருள் செய்து அழகிய திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனது செம்பாதியிற் கலந்து கொண்டிருக்கும் பசிய தேன் போன்றவளே, வாழையின் செழுமையான கனி நிகர்ப்பவளே, வெவ்விய பாலை நிலம் போன்ற ஈரமில்லாதாருடைய நெஞ்சகம் பொருந்துதல் இல்லாத பூப்போன்ற திருவடியையுடைய கொடியே, கச்சால் அழகு செய்யப்பட்ட முலையையுடைய மான்போன்றவளே எங்கட்கருள் புரிக. எ.று.
எங்கும் எப்பொருளிலும் கலந்திருக்கும் பெருமானாகிய சிவபெருமான் திருவொற்றியூரில் கோயில் கொண்டிருப்பதற்கு ஏது இதுவென்பாராய், “எம்பால் அருள்வைத்து எழில் ஒற்றியூர் கொண்டு இருக்கும் இறை” என இயம்புகின்றார். இறைவன் திருமேனியை வலம் இடம் என இருபாலாக்கி இடப்பால் முற்றும் தானே நிறைந்தமை பற்றிச் “செம்பால் கலந்த பைந்தேனே” என்று இசைக்கின்றார். பாலிற் கலந்து இனிமைச் சுவை நல்கும் இயல்புடைய நயம் தோன்றச் “செம்பால் கலந்த பைந்தேனே” என்று தெரிவிக்கின்றாருமாம். கதலி - வாழை. வாழையின் செழுங்கனி சுவை மிகுந்து உண்பார்க்கு நலம் பயப்பது பற்றிக் “கதலிச் செழுங்கனியே” என்று பாராட்டுகின்றார். வெம்பால் - வெயில் வெம்மை மிகுந்து நீர்ப்பசையின்றி வெதுப்பும் நிலம். அப்பாலை போன்ற ஈரம் சிறிதுமில்லாத மனமுடைய கொடியரை, “வெம்பாலை நெஞ்சர்” என்றும், அவரை விரும்பி அவர் மனத்துள் சென்று பொருந்தாத நலம் உடைமை விளங்க “வெம்பாலை நெஞ்சருள மேவா மலர்ப்பத மென்கொடியே” என்றும் புகழ்கின்றார். வம்பு - மார்புக்கணியும் கச்சு. சிவசத்தியாகிய தான் பெண்மை வடிவு கொண்டு பிறங்குதல் பற்றி, அம்பிகையை “வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே” என வளவிய சொற்களால் புனைந்துரைக்கின்றார்.
இதனால், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை, திருவொற்றியூரிற் கோயில் கொண்டிருக்கும் இறைவனுடைய செம்பால் கலந்த தேன் போன்றவள், கதலியின் செழுங்கனி யன்னவள், வெம்பாலை நெஞ்சருள், மேவாத திருவடியும் கச்சணிந்த பெண்மை வடிவுமுடைய பொருமாட்டியுமாவாள். (57)
|