1443. எம்பால் அருள்வைத் தெழிலொற்றி
யூர்கொண் டிருக்கும்இறைச்
செம்பால் கலந்தபைந் தேனே
கதலிச் செழுங்கனியே
வெம்பாலை நெஞ்சருள் மேவா
மலர்ப்பத மென்கொடியே
வம்பால் அணிமுலை மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: யாம் பொருளின்றி மெலிவெய்தும் போது எடுத்துக்கொள்ளுமாறு எமக்கெனப் பொன்தரும் செல்வராயினோர் வைத்துதவிய சேமவைப்பே, மெய்யன்பர் தேடுகின்ற உண்மை ஞானமாகிய செல்வமே, மாலையாகத் தொடுக்கப்பட்ட கார்காலத்து மலரும் பூச்சூடிய கூந்தலையுடைய பிடியானையின் ஒப்பற்ற நடையை யுடையவளே, அழகிய சீர்மிக்க திருவொற்றியூரில் உள்ள மான்போன்ற வடிவுடை மாணிக்கமே. எ.று.
ஏமம் - பொன். பொன் கொடுத்துதவும் செல்வர்களை “ஏமம் உய்ப்போர்” என உரைக்கின்றார். வளம் சுருங்கிய காலத்தில் வாட்டமின்றி எடுத்துக் கோடற் பொருட்டுச் செய்யப்படும் உதவியை, “சேமவைப்பு” என விளக்குகின்றார். அன்பை ஞானம் என்பவாகலின், அன்புடையோர் ஞானமே வேண்டுதல்பற்றி “அன்பர் தேடும் மெய்ஞ்ஞானத் திரவியமே” எனச் சிறப்பிக்கின்றார். தாமம் - மாலை. கார் - மலர்; கார்காலத்து மலரும் முல்லை. முல்லை மாலை சூடிக் கொள்வது பற்றி, “கார்மலர்க் கூந்தல்” எனப் பாராட்டி, பிடியானை போன்ற நடையுடைமையை வியந்து, “கூந்தற் பிடி மென்தனி நடையாய்” என்று பரவுகின்றார்.
இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை, நல்லோர் எய்ப்பினில் வைப்பாய்ப் பயன்பட உதவிய செல்வமாகவும், மெய்யன்பர் தேடும் ஞானத் திரவியமாய், முல்லைமாலை சூடிய பிடியானை போன்ற நடையினை யுடையளாய் விளங்குகிறாள் என்பதாம். (58)
|