1445. மன்னேர் மலையன் மனையும்நற்
காஞ்சன மாலையும்நீ
அன்னே எனத்திரு வாயால்
அழைக்கப்பெற் றார்அவர்தாம்
முன்னே அருந்தவம் என்னே
முயன்றனர் முன்னும்ஒற்றி
வன்னேர் இளமுலை மின்னே
வடிவுடை மாணிக்கமே.
உரை: படம் பொருந்திய பாம்பைப் பூணாரமாக அணியும் திருவொற்றியூர் இறைவனது இடப்பாலில் தெய்வமணம் கமழ விளங்கும் பச்சை நிறக்கொடி போன்ற வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே ஒரு கணப் பொழுதிலேனும் உள்ளத்துக் கவலைகளைத் துறந்து அமைதி சான்ற குணம் சிறிதும் பெற்றிலேன்; உன் திருவுள்ளக் குறிப்பும் அறியேன்; யாது செய்வேன்; அருள்புரிக. எ.று.
பாம்பின் படத்துக்கும் பணம் என்று பெயருண்டு. ஒற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் பெருமானை “ஒற்றியெம்மான்” என உரைக்கின்றார். உமாதேவியின் நிறம் பச்சையாதலால் “பச்சைக் கொடி” எனப் பகர்கின்றார். திருமேனி தெய்வமணம் கமழ்வது விளங்க, “தெய்வ மண மொன்று பச்சைக்கொடி” எனச் சிறப்பிக்கின்றார். பசுங்கொடியிடத்து நறுமணம் கமழ்வது இயற்கையாதலால், “தெய்வமணமொன்று பச்சைக்கொடி” எனல் பொருந்துவதாயிற்று. வாழ்க்கையில் செய்வினைக்குரிய நினைவு சொல் செயல் என்ற மூன்றனையும் இயக்கும் உள்ளம், மகிழ்வினும் கவலையில் பெரிதும் அழுந்தி எப்போதும் நொந்து கொண்டிருத்தலின், “கணமொன்றிலேனும் கவலைக் கடல் கடந்து” உள்ளம் அமைதி பெற்றதில்லை என்று கூறுகின்றார். ஒன்றினொன்று தொடர்ந்து வருதலின் “கவலைக்கடல்” என்று சிறப்பிக்கின்றார். கவலைபோல் மனநோயைப் பெருக்காமல் தண்ணிய சால்பு பயக்கும் அமைதி சிறப்புடைமையின், அதனைக் குணமென்று வியந்து, அஃது இல்லேன் என்பாராய் “குணமொன்றிலேன்” எனவும், அதனைப் பெறுவதே வேண்டற்பால தென்றற்கு “ஏது செய்கேன்” எனவும், அதுவும் இறைவன் திருவுள்ளப்படி நிகழ்வதென்றற்கு “நின்னுள்ளக் குறிப்பறியேன்” எனவும் வடலூர் வள்ளல் உரைக்கின்றார்.
இதன்கண், தெய்வமணம் கமழும் பச்சைக்கொடி போலும் வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையை முன்னிலைப்படுத்து மனக் கவலையின்றி அமைதி சான்ற குணமாண்பு கணப்போதும் இல்லேகினான்றேன்; உடையனாதற்கு யான் செயற்பாலது யாது? நின் திருவுள்ளக் குறிப்பறியேன் என மொழிகின்றார். (60)
|