1447. கருவே தனையற என்னெஞ்
சகத்தில் களிப்பொடொற்றிக்
குருவே எனும்நின் கணவனும்
நீயும் குலவும்அந்தத்
திருவே அருள்செந் திருவே
முதற்பணி செய்யத்தந்த
மருவே மருவு மலரே
வடிவுடை மாணிக்கமே.
உரை: அழகிய ஒற்றிநகர்க்கண் கோயில் கொண்டுறையும் பூரணராகிய சிவன்பால், அழகு செய்யப்பட்ட பச்சை நிறமான மணி போல்பவளே, வடிவுடை மாணிக்கமான அம்பிகையே, உள்ளும் புறமும் ஒப்ப நறுமணம் கமழும் புண்ணியத் தன்மையுடைய மல்லிகை மலர் போன்றவளே, எளியேன் எண்ணிய எண்ணங்களெல்லாம் பயன் தரும்படி, எனக்கு உன்னைடைய அருளைப் புரியத் திருவுள்ளம் கொள்ளுக. எ.று.
குறைவிலா நிறைவு எனப்படும் இயல்பினனாதலால் சிவனைப் “பூரணன்” என்றும், திருவொற்றியூரில் கோயில்கொண்டிருப்பது பற்றி, “ஒற்றிப்பூரணன்” என்றும் உரைக்கின்றார். செம்மேனியம்மானாகிய சிவனது உடற்கூற்றில் ஒன்றித் தனது பசுமையொளி மிக்குத் திகழப் பெறுவது வியந்து, “பூரணன்பால் மண்ணிய பச்சை மணியே” என்று பரவுகின்றார். மலர்ந்தாலன்றி நறுமணம் கமழ்வதில்லாத மல்லிகை போலாது மலரின் உள்ளும் புறமும் ஒப்ப மணம் கமழும் தெய்வ மல்லிகைப் போது என்பார், “உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் புண்ணிய மல்லிகைப் போதே” என்று புகல்கின்றார். இறைவன் இடப்பாலில் ஒன்றிப் பசுமை நிறமும் உள்ளும் புறமும் ஒத்த உயரிய தெய்வமணமும் கொண்டு விளங்குவதை வியந்து பாராட்டும் வடலூரடிகள், தமக்கு ஒரு இன்னருள் வேண்டுவாராய், தாம் எண்ணுகிற எண்ணங்களெல்லாம் இனிய பயன்தர வேண்டும் என்பாராய், “எண்ணிய எண்ணங்களெல்லாம் பலிக்க எனக்கு உன் அருள் பண்ணிய உள்ளம் கொள்” என்று வேண்டுகின்றார். அருள் செய்க என்று வேண்டலுற்ற அடிகளார், அருள் பண்ணிய உள்ளங்கொள் என வேண்டுவது விரைந்து அருள் பண்ணுதல் என்பதைச் சுட்டி நின்றது.
இதன்கண், திருவொற்றியூர்ச் சிவபூரணனை ஒன்றிய நிறமும் தெய்வ மணமும் ஒருங்கு பெற்ற வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையை வேண்டி, தாம் எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்கக் கனிந்த அருளுள்ளம் உடையவளாகுக என வேண்டுகின்றார். (62)
|