1449.

     தீதுசெய் தாலும்நின் அன்பர்கள்
          தம்முன் செருக்கிநின்று
     வாதுசெய் தாலும்நின் தாள்மறந்
          தாலும் மதியிலியேன்
     ஏதுசெய் தாலும் பொறுத்தருள்
          வாய்ஒற்றி யின்னிடைப்பூ
     மாதுசெய் தாழ்குழல் மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

     போன்றவனும், திருவொற்றியூரில் வாழ்கின்ற நின் கணவனுமாகிய சிவபெருமானுடைய திருமுன்னும், நன் ஞானத்தால் திருந்திய அன்பர்கள் புகழ்கின்ற நின்னுடைய திருமுன்னும் நின்று பரவி நல்ல திருவருளாகிய தேனைப் பெறுதற்கு விரும்பிப் புதியனாய் வந்து நிற்கின்றேன்; நீ சிறிதும் மனம் இரங்காத விதத்தைக் கண்டு மனம் வருந்நிற்கின்றேன்; இது நன்றன்று. எ.று.

     மருந்து - தேவர்கள் கடல் கடைந்து பெற்ற அமுதம். இது எளிதில் பெறலாகாமை பற்றி “மருந்தின் நின்றோன்” என்று ஒற்றியூர் இறைவனை உவந்து உரைக்கின்றார். மகிழ்னன் - கணவன். அம்பிகையின் திருமுன் நின்று வழிபடுவதற்கு முன்னர் திருவொற்றியூர் இறைவன் திருமுன் நின்று வழிபட்டமை விளம்புவார் “ஒற்றியூர் வாழும் நின் மகிழ்ணன் முன்னும்” என்று கூறுகின்றார். சிவன் திருமுன்னைவிட அம்பிகையின் திருமுன்பு சிவஞானத்தாலும் சிவ ஒழுக்கத்தாலும் திருந்திய மேலோர்கள் எப்பொழுதும் நின்று புகழும் மேன்மை உடையது என்றற்குத் “திருந்தி நின்றோர் புகழ் நின்முன்” என்று சிறப்பிக்கின்றார். திருவருளைப் பெற்று, சிவானந்தம்பெற விரும்புகின்றாராதலின் “திருவருள் தேன் விழைந்து” என்றும், ஞானநூல் ஓதி நல்லறிவு பெற்று, திருவருள் இன்பப்பேற்றைத் தெளிந்து வருகின்ற தமது புதுமைநலம் வெளிப்படுத்துகின்றாராதலின் “விருந்தின் நின்றேன்” என்றும் விரும்பி உரைக்கின்றார். வழிபட்ட பயன் உடனே கிடைக்காமையால் மனத்தோடு வருத்தமுற்ற வடலூரடிகள், அம்பிகை மனம் இரங்கிலள் என அவலமுற்று, சற்றும் உள் இரங்காத விதத்தைத் கண்டு “வருந்தி நின்றேன்” என்று முறையிடுகின்றார். அறிவு பெற்று மனம் திருந்தி நல்லொழுக்கம் மேற்கொண்டு திருவருள் இன்பம்பெற விழைந்த புதியராய் வருபவர்க்கு விரைந்து அருள் புரிவதை விடுத்துக் காலம் தாழ்ப்பாயானால் நின் திருவருள் பெறுவது அரிதாம் என்ற எண்ணத்தால், அன்பர்கள் வருந்தி மனமாறி வேறு நெறியில் திரும்புவர்; அது நின் தாய்மையின் வாய்மைக்கு நன்றாகாது என்பாராய் “இது நன்றோ” என்று தெரிவிக்கின்றார்.

     இதன்கண், ஞானநூல் அறிவால் திருவருளின் நலம் உணர்ந்து பெற விழைந்து இறைவன் திருமுன்னே அன்றி அம்பிகையின் திருமுன்னும் நின்று பணிந்து பெறாது தாமதமானது பற்றி அவலித்த வடலூரடிகள் முறையிட்டவாறாம்.

     (64)