1452.

     துன்பே மிகும்இவ் அடியேன்
          மனத்தில்நின் துய்யஅருள்
     இன்பே மிகுவதெந் நாளோ
          எழிலொற்றி எந்தைஉயிர்க்
     கன்பேமெய்த் தொண்டர் அறிவே
          சிவநெறிக் கன்பிலர்பால்
     வன்பேமெய்ப் போத வடிவே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      'எம்மிடத்து உண்டாகிய குற்றங்களைப் போக்கிய நங்கையே' என்று திருமாலும் நான்முகனும் வந்து போற்றுகின்ற திருவொற்றியூரில் வாழும் மயில் போன்றவளே, வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, மற்றவர்கள் எல்லாம் மகிழ்வோடிருக்கும் பொழுது நான் ஒருவன் மாத்திரம் மனத்தில் சஞ்சலமுற்று அந்தோ வாடி வருந்துவது அழகாகுமோ, அருள் புரிக. எ.று.

      திருமாலும் நான்முகனும் சிவபெருமானுடைய ஆணைவழி நின்று உலகுயிர்களை முறையே காத்தலும் படைத்தலும் செய்யும் தெய்வங்களாவர். சிவனுடைய இடப்பாகத்தில் ஒருகூறாய் பிரிப்பின்றி உடனுறை பெருமாட்டி ஆதலால், திருமால் முதலிய தேவர்கள் வந்து வணங்கும் சிறப்புடையவளானாள், அவள்பால் தேவர்கள் வந்து வணங்கிக் குறைகளைச் சொல்லி முறையிட்டு நீக்கிக் கொள்வது இயல்பாதலால், அதனை “நம் தோடம் நீக்கிய நங்காய் எனத் திருநான் முகன்மால் வந்தோதும் மயிலே” என்று சிறப்பித்துரைக்கின்றார். தோடம் - குற்றம். திருநான்முகன்மால் என்பதனைத் திருமால் நான்முகன் என இயைத்துக் கொள்க. மயில் போன்ற சாயல் உடைமை பற்றி “மயிலே” எனப் பரவுகின்றார். துன்பம் வந்து மக்களைத் தாக்கும் பொழுது, அவர்களுடைய நினைவும் உணவும் தம்மையே சூழ்ந்து தன்னல இருளில் படிந்து தெளிவிழந்து விடுதலால், பிறர் உற்று வருந்தும் துன்பங்களைக் காண முடிவதில்லை. அன்றியும் தாம் ஒருவரே துன்புறுவதாகவும் பிறரெல்லாம் இன்பமே துய்த்துக் கொண்டிருப்பதாகவும் எண்ணிப் புலம்புவதும் உண்டு. அவ்வியல்பு புலப்படச் “சந்தோடமாய் பிறரெல்லாமிருக்கவும் ஒரு தமியேன் மட்டும் சஞ்சலத்தால் வாடல் அழகோ” என்றும், இது அருளாளர் திருமுன் நிகழ்வது சிறப்பன்மையில் 'அருட்கழகோ' என்றும் தெரிவித்துக் கொள்கின்றார். சந்தோடம் - மகிழ்ச்சி. சஞ்சலம் - வருத்தத்தால் உண்டாகும் மனக்கலக்கம். துன்பத்தால் ஆற்றாமை தோன்ற உரைத்தலால் 'அந்தோ என்பது இரக்கக் குறிப்பு. ஒரு தமியேன் - தனி ஒருத்தன்.

     இதன்கண், நான்முகன் திருமால் முதலிய தேவர்கள் தங்கள் குறை நீக்கும் தாயே என்று பரவும் வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை திருமுன், வடலூரடிகள் பணிந்து நின்று, உலகில் ஏனையெல்லோரும் இன்பமாக மகிழ்ந்திருக்கத் தான்மட்டில் துன்பத்தால் மனக்கலக்கமுற்று வாடி வருந்துவதாகவும், அதனைப் போக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது அம்பிகையின் திருவருளுக்கு அழகாகாது என்றும் விண்ணப்பம் செய்கின்றார்.

     (67)