1454. சந்தோட மாப்பிறர் எல்லாம்
இருக்கவும் சஞ்சலத்தால்
அந்தோ ஒருதமி யேன்மட்டும்
வாடல் அருட்கழகோ
நந்தோட நீக்கிய நங்காய்
எனத்திரு நான்முகன்மால்
வந்தோதும் ஒற்றி மயிலே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, கண்ணப்ப நாயனார் ஏத்துகின்ற நல்ல காளத்தியை யுடையவரான சிவனணிந்த நாணை அணிந்துகொண்டு, திருவொற்றியூரை அடைகின்ற தொண்டர்களுக்கு வேண்டுகின்ற நலம் பலவும் தருகின்ற சிவையாகிய நற்பொருளே, மேலான சிவானந்தமாகிய இனிய தேனே, பிறவற்றோடு வைத்து எண்ணப்படாத அழகுமிக்க ஓவியமே, எங்களை அன்புடன் ஏற்றுக்கொண்டருளுகின்ற அழகிய பசுமையான பொன்னாலாகிய வடிவமே, எமக்கு அருள் புரிவாயாக. எ.று.
கண்ணப்ப நாயனார் தமது கண்ணையிடந்து அப்பிச் சிவனருள் பெற்றவர். அவர் வழிபட வீற்றிருப்பதுபற்றிக் “காளத்தி ஈசனைக் கண்ணப்பன் ஏத்தும் நற்காளத்தியார்” என்று பாராட்டுகின்றார். அம்பிகையை மங்கலநாண் பூட்டி மணந்துகொண்ட சிறப்புத்தோன்றக் “காளத்தியார் மங்கலங்கொள் நலமே” என்றும், திருவொற்றியூரை அடைந்து சிவனை வழிபடுகின்ற தொண்டர்கட்கு வேண்டும் ஞான இன்பநலங்களை அருளுவதுபற்றி, “ஒற்றி நண்ணப்பர் வேண்டும் நலமே” என்றும் பரவுகின்றார். சிவபெருமானுடைய திருவருளால் வழிபட எய்துகின்ற இன்பம் ஏனை உலகியல் இன்பங்கள் எல்லாவற்றையும்விடப் பேரானந்தமும் பெருந்தேனுமாய் இன்பஞ் செய்தலால், “பரானந்த நன்னறவே” என்று பாடுகின்றார். அம்பிகையின் அருள் இன்ப வடிவம் எத்தகைய நுண்புலமை வாய்ந்த ஓவியப் புலவர்க்கும் உள்ளத்தில் அகப்படாத பேரெழிலுடைத்தாய்ப் பிறங்குதலின் “எண்ணப் படா எழில் ஓவியமே” என்று பரவுகின்றார். மனம் மொழி மெய்களால் தூயராய் நின்று வழிபடுகின்ற அடியவர்களின் அன்பை ஏன்று கொண்டு, அவர்கள் விரும்பும் அழகிய பொன்னிறம் பொலியும் வண்ணக் காட்சி தந்து வாழ்வித்தலால், “எமையேன்று கொண்ட வண்ணப் பசும்பொன் வடிவே” என்று வனைந்தோதி வழிபடுகின்றார்.
இதன்கண், கண்ணப்பர் வழிபடுகின்ற காளத்தி ஈசர் பூட்டிய திருமங்கலத்தை அணிந்துகொண்டு, தன் திருவடியை வணங்கி நலம் பெற வரும் அன்பர்களுக்குப் பரானந்த நறவை அருள்பவளாய் ஓவிய நுண்புலவர் நுழை புலனுக்கும் எட்டாத ஓவியமாய், உண்மை அன்பரது அன்பை ஏன்று கொண்டு வண்ணப் பசும்பொன் வடிவில் காட்சி தரும் அம்பிகையே, எமக்கு அருள் புரிக என்று வேண்டுகின்றார். (69)
|