1528.

     நெய்தல் பணைசூழ் ஒற்றியினார்
          நிருத்தம் பயில்வார் மால்அயனும்
     எய்தற் கரியார் மாலையிட்டார்
          எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால்
     உய்தற் கடியேன் மனையின்கண்
          ஒருநா ளேனும் உற்றறியார்
     கொய்தற் கரிதாங் கொடியேஎன்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      கூர்மையுறும் நீண்ட வேல் போன்ற கண்ணையுடைய தோழி, போர்க்கப்பட்ட யானைத்தோலை யுடையவரும், திருமால் பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள் யாவர்க்கும் காண்பதற் கரியவருமாகிய சிவபெருமான், யான் அடைந்து மகிழ்தற்கு எளியவராய் என்னை மணந்து மாலையிட்டாராயினும், ஈர்க்கும் இடை நுழையாவாறு பருத்து மதர்த்த என் கொங்கைகளின் செருக்கை இன்னும் போக்கினாரில்லை; எனது இக்குறையை வேறே யாவர்க்கு எடுத்துரைப்பேன். எ.று.

     கூர்த்தல் - கூர்மை செய்தல். வேற்படையை கூராகத் தீட்டி நெய் பூசி வைத்தல் போர் மறவர் மரபு. அவ்வியல்பு தோன்ற “கூர்க்கும் வேல்” என்று கூறுகின்றாள். போர்க்கும் உரி - போர்வையாக உடம்பின் மேல் அணிந்து கொள்ளும் யானைத்தோல். யானையின் உடம்பினின்றும் உரிக்கப்பட்டதாதலின் சிவனது யானைத்தோற் போர்வையை “போர்க்கும் உரி” எனப் புகழ்கின்றாள். புங்கவர் - உயர்ந்தவர். மக்களின் தேவர்கள் உயர்ந்தவர்களாதலின் அவர்களைப் “புங்கவர்” என்கின்றாள். போகி - இந்திரன். எப்பொழுதும் போகநுகர்ச்சி யுடையனாதல்பற்றி இந்திரனைப் “போகி” என்பர். புத்தி யின்பத்தை வேண்டாது போக நுகர்ச்சியே வேண்டுதலால், தேவர்கட்கு ஞான வின்ப மூர்த்தமாகிய சிவத்தை அடைதல் அரிதாகலின், “புங்கவர்கள் யார்க்கு மரியார்” என்று கூறுகின்றாள். சிவஞான இன்பப் பேற்றையே விழைதலால், தனக்குச் சிவப்பேறு எளிது என்பாளாய், “எனக்கெளியர்” என இயம்புகிறாள். மானிடச் சட்டை தாங்கி வந்து தன்னை மணந்து கொண்டார் என்றற்கு இவ்வாறு கூறுகிறாள் எனினும் அமையும். காம வேட்கை மிக்குற்ற இளமகளிர்க்கு மார்பிற் கொங்கைகள் புடைத்து மதர்த்து ஒன்றிற்கொன்று இடைவெளி யின்றி நெருங்கியிருத்தல் பற்றி “ஈர்க்கும் புகுதா முலைமதம்” என இசைக்கின்றாள். “ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்” (திருவா) என மணிவாசகர் கூறுவது காண்க. இன்பக் கூட்டக் கலவியால் கொங்கை மதம் தணிந்து ஒடுங்கும் என்பதுபற்றி “மதத்தைத் தவிர்த்தாரல்லரடி” என எடுத்துரைக்கின்றாள். “இன்னும்” என்றதனால் போக நுகர்ச்சி எய்தாமை உணர்த்துகின்றாளாம்.

     (17)