1529.

     போர்க்கும் உரியார் மால்பிரமன்
          போகி முதலாம் புங்கவர்கள்
     யார்க்கும் அரியார் எனக்கெளியர்
          ஆகி என்னை மாலையிட்டார்
     ஈர்க்கும் புகுதா முலைமதத்தை
          இன்னுந் தவிர்த்தார் அல்லரடி
     கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      முழுத் திங்கள் போன்ற கலை ஒளி பொருந்திய முகத்தை யுடைய தோழியே, யார்க்கும் இறையவனும், திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவரும், இனிமைப் பண்புடையவருமாகிய சிவபெருமான் என் கண்ணெதிரில் தோன்றி எனக்குக் கணவராய் மாலையணிந்து என்னை வந்து கூடாராயினராகலின், இது என்ன வஞ்சனையோ அறிகிலேன் அவர் பொறுக்கும் நல்லியல்புடையவரும் இரக்கமுடையவரும் பொய் கூறாத வருமாவர்; நான் கூறுவது சிறிதும் பொய்யன்று; எனது இக் குறையை யார்க்குக் கூறுவேன். எ.று.

     குறையா மதி - முழுச் சந்திரன். வாள் - ஒளி. ஈண்டுக் கலைகள் நிறைவதால் மிகும் ஒளி மேற்று. எங்கும் தங்கி யாவர்க்கும் முறை வழங்குவது பற்றிச் சிவபெருமானை “இறையார்” என இயம்புகிறாள். “இனியார்” - தன்னை விரும்புவார்க்கு இனிமையே செய்தருளுபவர். “நச்சுவார்க்கு இனியர் போலும் நாகை வீறட்டனாரே” என்று திருநாவுக்கரசர் கூறுவர். மறையார் - மறையாதவர். மக்களுருவில் தோன்றி மணவாளனாய்த் தன்னை மணக்கின்றமை புலப்பட “மறையார் என் கணவர் எனக்கு மாலை யிட்டார்” என உரைக்கின்றாள். மறையார் என்பதற்கு, நான்காகிய மறைகளை யுடையவரெனினும் பொருந்தும். மணந்து கொண்டவர் தன்னைக் கூடாது ஒழிந்தமைபற்றி “மருவார் என்னை வஞ்சனையோ” என்று சொல்லுகிறாள். பொறுமைப் பண்பும், இரக்கத் தன்மையும் இல்லாதவர்களே வஞ்சனை செய்வர்; என் கணவர் அவ்வியல்பினரல்லர் என்பாளாய், “பொறையார் இரக்கம் மிகவுடையார்” என இயம்புகிறாள். பொய்கூறுவதும் அவர்க்கு இயல்பன்று என்றும், அந்நிலையில் தான் கூறுவதும் பொய்யல்ல என்றும் கூறுபவள், “பொய் ஒன்றுரையார் பொய்யலடி” எனப் புகல்கின்றாள். அலவடி, அலடி என இடை குறைந்தது.

     (18)