1530.

     இறையார் ஒற்றி யூரினிடை
          இருந்தார் இனியார் என்கணவர்
     மறையார் எனக்கு மாலையிட்டார்
          மருவார் என்னை வஞ்சனையோ
     பொறையார் இரக்கம் மிகவுடையார்
          பொய்ஒன் றுரையார் பொய்யலடி
     குறையா மதிவாண் முகத்தாய்என்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      எனது தோழியாகிய மாதே, யானைத் தோலைப் போர்ப்பவரும், திருவொற்றி யென்னும் ஊரை யுடையவரும், என்னை ஆளாக வுடையவரும், இன்ப நிறைவு பொருந்திய மணமாலையை எனக்கு அணிந்தவருமான சிவபெருமான் என்னைப் பின்பு போந்து கூடா தொழிந்தாராயினும், என்னுடைய பிழைகளை எடுத்துரைத்து என்னைக் கெடுப்பதிலர்; என் சொற்களைக் கேட்க மாட்டாராயினும், எனக்குக் கணவராய் வேண்டுவ என்றேனும் கொடா தொழியார்; எனது இக் குறையை எவர்க்கு எடுத்துரைப்பேன். எ.று.

     கரித்தோல் - யானைத்தோல். உடுப்பார் எனப் பொதுவாய்பாட்டாற் கூறினாராயினும் போர்ப்பாரென்பது கருத்தாகக் கொள்க. ஒற்றியென்பது உரிய பெயராயினும், மருதவளமுடைமை பற்றி, “ஒற்றி யெனும் ஊரார்” என வுரைக்கின்றாள். மடுப்பு ஆர் இன்பமாலை, இன்ப மடுப்பு ஆர் மாலையென இயையும். மடுத்தல் - நிறைதல். இன்பமாலை யெனவே திருமண மாலை என்பது பெற்றாம். மணந்த கேள்வன் பின்னர்ப் போந்து கூடாமை நினைந்து இரங்குவது பொருளாகலின், “மாலை யிட்டார் மருவார்” எனக் கூறுகின்றாள். கெடுத்தலைச் செய்பவர் அதற்கு ஏதுவாகச் சில தவறுகளைப் பேசுவது உலகியலாதலால், “எனது பிழை யுரைத்துக் கெடுப்பார் இல்லை” எனவும், விரைந்து வேண்டுவன அருளாமை தோன்ற, “என் சொலினும் கேளார்” எனவும், உயிர்கள் எண்ணிறந்தன வாயினும் ஒருகாலத்தே வீடுபெறும் என்ற சமய வுண்மையைக் கருதிக் கொண்டு “என்றோ கொடுப்பார்” எனவும் இயம்புகின்றாள். “பழித்து இகழ்வாரையும் உடையார்” எனச் சான்றோர் கூறுவது பற்றி, “என் சொலினும் கேளார்” என உரைக்கின்றாள். சொல்லுதல், பழித்தல் மேலும் நின்றது. கேள்வர் - கணவர்; காதலருமாவர்.

     (19)