1532. எருதில் வருவார் ஒற்றியுளார்
என்நா யகனார் எனக்கினியார்
வருதி எனவே மாலையிட்டார்
வந்தால் ஒன்றும் வாய்திறவார்
கருதி அவர்தங் கட்டளையைக்
கடந்து நடந்தேன் அல்லவடி
குருகுண் கரத்தாய் என்னடிஎன்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: அம்பை வென்று சிறக்கும் இரண்டு வேல்போன்ற கண்களையுடைய தோழி, யானையை வென்று அதன் தோலை யுரித்துப் போர்வையாகக் கொண்ட சிவபெருமானை எனக்கு மணமாலை யணிந்த கணவரென்று திருமுன் சென்றால், வருக என்றோ செல்க என்றோ உரைக்காமல் பேசாமை மேற்கொண்டுள்ளார்; அத்துயரம் பொறாமல் ஆவெனக் கதறிக் கண்ணீர் சொரிந்து அழுதால், அது நீங்கும் காண்; இந்த என் குறையை எவர்க்கு எடுத்துரைப்பேன். எ.று.
கோ - அம்பு. கூர்மையாலும் தொகையாலும் அம்பினும் மேற்படுவது பற்றி, “கோவென்று இருவேல்” எனச் சிறப்பிக்கின்றார். வேல் ஆகு பெயராய்க் கண்ணுக் காயிற்று. மா - தாருக வனத்து முனிவர் விடுத்த யானை. மணாளர் - மணம் செய்து கொண்ட கணவர். “உரிமை கொடுத்த கிழவோனாதலின்” மனையவள் கணவன் அருகடைதல் இயல்பு. அருகணைந்த மனைவியை வேண்டி வருக என்றலும், வேண்டாது செல்க என்றலும் காதற் செய்கையாதலின், அது செய்யாமைக்கு வருந்துமாறு தோன்ற, “வந்தடைந்தால் வாவென் றுரையார் போ என்னார் மௌனம் சாதித் திருந்தனர்காண்” என்று கூறுகின்றாள். மனத்தின்கண் நிறையும் துக்கம் கண்ணீர் சொரிந்து கதறிப் புலம்பியவழிக் குறைவது பற்றி, “ஆவென்றலறிக் கண்ணீர்விட்டழுதால் துயரம் ஆறுமடி” எனச் சொல்லி அவலிக்கின்றாள். தொண்டையை யடைக்கும் துயரம் வாய் விட்டுச் சொன்னால் தீரும் என்னும் வழக்குப்பற்றி, “என் குறையை எவர்க்குக் கூறுவனே” என மொழிகின்றாள். (21)
|