1533. மாவென் றுரித்தார் மாலையிட்ட
மணாளர் என்றே வந்தடைந்தால்
வாவென் றுரையார் போஎன்னார்
மௌனஞ் சாதித் திருந்தனர்காண்
ஆவென் றலறிக் கண்ணீர்விட்
டழுதால் துயரம் ஆறுமடி
கோவென் றிருவேல் கொண்டாய்என்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: நிலைத்த புகழையுடையவரும், திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் சிவபெருமானுமாகிய தலைவர், நலமனைத்தும் நல்குவாராய் எனக்கு மாலையிட்ட கணவராவரென்று கருத்தால், அவரை ஒரு காசும் யான் கேட்டதில்லை; அவரும் எனக்குத் தந்ததில்லை; வாய் திறந்து கேட்பேனாயின் யாது விளையுமோ, அறிகிலேன்; யானைக் கொம்புபோல் உயர்ந்து மணியார மணிந்த கொங்கைகளை யுடையவளே, எனது குறையை வேறு யார்க்கு உரைப்பேன். எ.று.
கோடு - யானைக் கொம்பு. நிலைபெறும் இயல்பினதாகலின், “நாட்டும் புகழ்” என்று நவில்கின்றாள். முறைப்படி மணந்து கொண்ட கணவரென்றற்கு, “மாலையிட்ட கணவ” ரென்றும், மாலையிட்டது, நலம் பலவும் எனக்குத் தருதற்பொருட்டே என்பாளாய், “நன்மை யெலாம் காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர்” என்றும் இயம்புகிறாள். கணவன் மனைவிக்குக் காசு நல்குவதும், மனைவி கணவனைக் காசுகேட்பதும் உலகியலாதலின், “ஓர் காசளவில் கேட்டு மறியேன் தந்தறியார்” எனவும், காசாசை கண்டு என்னை வெறுப்பரோ என அஞ்சுகிறேனென்பாள், “கேட்டால் என்ன விளையுமடி” எனவும் கூறுகின்றாள். (22)
|