1534. நாட்டும் புகழார் திருஒற்றி
நகர்வாழ் சிவனார் நன்மையெலாம்
காட்டும் படிக்கு மாலையிட்ட
கணவர் எனஓர் காசளவில்
கேட்டும் அறியேன் தந்தறியார்
கேட்டால் என்ன விளையுமடி
கோட்டு மணிப்பூண் முலையாய்என்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: மேருமலையை வில்லாக வளைத்தவரும், திருவொற்றியூரின் கண் எழுந்தருளுபவருமான சிவபெருமான், எனது கற்பென்னும் மனத்திண்மையைச் சிதைத்து மாலையணிந்து எனக்குக் கணவரானார் எனப்படுவதன்றிச் சிற்ப வேலைப்பாடமைய மணிகள் பதிக்கப் பெற்ற படுக்கையில் உடன் கிடந்து கூடினாரென்ற வழக்கே இல்லை; அச்சம் தரும் படத்தையுடைய பாம்புபோன்ற இடையையுடைய என் தோழி, எனது இக்குறையை யார்க்குக் கூறுவேன். எ.று.
வில்லாக வளைக்கப்பட்டது மேருமலையாகலின், வெற்பென்றது மேருவுக்காயிற்று. மேவி யமர்தல் - விரும்பி எழுந்தருளுதல். கற்பு, கல்வி யுணர்வால் உளதாகும் மனத்திண்மை; “கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின்” (குறள்) எனச் சான்றோர் கூறுவதறிக. கல்வி கேள்வி யறிவுகளாற் கன்னிப் பருவத்துளதாகும் மனத்திண்மை, காதற் காமப் பருவத்திற் மென்மை யெய்துதலால், “எனது கற்பையழித்தார் மாலையிட்டுக் கணவரானார்” என வுரைக்கின்றாள். வேட்கை வெம்மை கண்டு பலரறிய மணந்து கொண்டவர், அவ் வெம்மை தணியக் கூடிற்றிலர் என்பாள், “மாலையிட்டுக் கணவரானாரென்பதல்லால் மேடையில் என்னைச் சேர்ந்தாரென்பது இல்லையடி” எனக் கூறுகின்றாள். பன்னிற மணிகளைக் கொண்டு பூவும் கொடியும் இலையுமாகிய சிற்ப வேலைப்பாடு பொருந்தியிருப்பது விளங்க, மேடைப் படுக்கையைச் “சிற்ப மணிமேடை” எனச் சிறப்பிக்கின்றாள். கொன் - அச்சம். பை - பாம்பின் படம். இடை யென்றது அல்குலையெனக் கொண்டு, “பாம்பின் படம் போன்ற அல்குலையுடையவளே” என்பது முண்டு. “பையர வல்குல்” என்பது பெருகிய வழக்கு. (23)
|