1537. கரும்பின் இனியார் கண்ணுதலார்
கடிசேர் ஒற்றிக் காவலனார்
இரும்பின் மனத்தேன் தனைமாலை
இட்டார் இட்ட அன்றலது
திரும்பி ஒருகால் வந்தென்னைச்
சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி
குரும்பை அனைய முலையாய்என்
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: தோழி, தன்பால் மெய்யன்புடையார்க்கு உண்டாகும் துன்பங்களை நீக்குபவரும், திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் தியாகப் பெருமானும், எக்காலத்தும் இறத்தலில்லாத இயல்பினருமாகிய சிவபெருமான், “பெண்ணே! மனம் மகிழ்வாயாக” என மொழிந்து என்னை மணந்து மாலையிட்டாராக, மணமாலையை எனக்கு அணிந்தபோது அவரது திருமுகத்தைப் பார்த்துப் பரவிய யான், மறுபடியும் அதனைப் பார்த்ததில்லை. அதனால் மனநோய் பெற்றேனே யன்றி வேறு இன்பங் கண்டேனில்லை; இந்த என் குறையை யார்க்கு எடுத்துச் சொல்வேன். எ.று.
தீது - துன்பம். திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் சிவபிரானுக்குத் தியாகர், தியாகராசர் என்றெல்லாம் பெயர் வழங்குவ துண்மையால் “திருவொற்றித் தியாகர்” என்று கூறுகின்றாள். பிறவா இறவாப் பெருமானாதலால், சிவனை “அழியாத் திறத்தர்” எனத் தெரிவிக்கின்றாள். மகிழ்தி, வியங்கோள் கண்ணிய முன்னிலை ஏவல் வினை. மாலை - திருமண மாலை. மணம் புணர்ந்தபோது தரிசித்த திருமுகத்தை மீட்டும் கண்டறியே னென்றது, மணமகனாகிய சிவனை மீளவும் கூடி இன்புற்றதில்லை என்ற குறிப்பிற்று. கோது - இன்பம் பெறாது அது நினைந்து எய்தும் ஏக்கத்தின் மேற்று. (26)
|