1538.

     தீது தவிர்ப்பார் திருவொற்றித்
          தியாகர் அழியாத் திறத்தர்அவர்
     மாது மகிழ்தி எனஎன்னை
          மாலை யிட்டார் மாலையிட்ட
     போது கண்ட திருமுகத்தைப்
          போற்றி மறித்தும் கண்டறியேன்
     கோது கண்டேன் மாதேஎன்
          குறையை எவர்க்குக் கூறுவனே.

உரை:

      எருது எழுதிய வெற்றிக்கொடியை மேற்கொண்டவரும், மேன்மை யுடையவரும், திருவொற்றியூரை யுடையவருமாகிய சிவபெருமான், என்னிடம் போந்து, இந்தக் குளிர்ந்த பூமாலையை என் தோளில் அணிந்தாரே யன்றி என்னைக் கூடி மகிழ்வித்தாரல்லர்; யானும் அவரேயன்றிப் பிறரை நாடினதில்லை; வேறு காரணம் ஒன்றும் நானறி யேன்; அதனால் மலை போன்ற துன்பம் கொண்டு புலம்பா நிற்கும் எனது குறையை எவரிடம் உரைப்பேன். எ.று.

     வென்றிக் கொடி - பெற்ற வெற்றிக்கு அடையாளமாக உயர்த்தும் கொடி. எருது எழுதிய கொடியாதல் பற்றி “விடை யுயர்த்தார்” என விளம்புகின்றாள். மேல் - மேன்மை. சென்று, போந்து, வந்து எனற்பாலது சென்று என வந்தது பொது விதி. (தொல். கிளவி). என்னிடம் போந்து என்னை மணந்து கொண்டார் என்றுரைக்கும் குறிப்பால் “குளிர் பூமாலை யிட்டார்” என்று கூறுகின்றாள். குளிர்ச்சி கூறியது கூட்டம் நல்கினமை தோன்ற நின்றது. மீண்டும் போந்து கூடாமைக்குக் காரணம் காண்பாள், தன் மனம் காதற் கணவனாகிய சிவபிரானின் வேறாகப் பிற தெய்வங்களை நினைந்ததுண்டோ என ஆராய்ந்தமை புலப்பட, “யான் அவரேயன்றிப் பிறரை நாடினனோ” என உரைக்கின்றாள். தனது ஆராய்ச்சியால் பிறரை நாடினதில்லை என்பது தெரிந்தமையின் “அம்மா ஒன்றும் அறியனடி” என அறிவிக்கின்றாள். சிவபிரானைக் கூடாமையால் உளதாகிய துன்பத்தின் மிகுதியை, “குன்றிற்றுயர்” என்று குறிக்கின்றாள். ஆற்றாமை மிகுதி பற்றி “எனது குறையை எவர்க்குக் கூறுவனே” என இயம்புகிறாள்.

     (27)