1539. வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார்
மேலார் ஒற்றி யூரர்என்பால்
சென்றிக் குளிர்பூ மாலையிட்டார்
சேர்ந்தார் அல்லர் யான்அவரை
அன்றிப் பிறரை நாடினனோ
அம்மா ஒன்றும் அறியனடி
குன்றிற் றுயர்கொண் டழும்எனது
குறையை எவர்க்குக் கூறுவனே.
உரை: தோழி, துளைக்கப்படாத மாணிக்கமணி போன்ற திருமேனி கொண்ட அழகையுடையவரும், சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவரும், இறவாயியல்பால் என்றுமுள்ளவருமாகிய சிவபெருமான், எனக்கு மணமாலை சூட்டி மகிழ்வித்தவர் இன்னும் போந்து என்னைக் கூடிற்றிலர்; மேலும் நான் சொல்வது கேட்பாயாக; அவர் போந்து கூடாமைக்குக் காரணமாக என்னிடத்தே குற்றமுளது எனினும், அதனைக் கண்டு சென்று அவர்க்குக் கோட் சொல்பவர்கள் ஒருவருமில்லை; எனது இக்குறையை யார்க்குச் சொல்வேன். எ.று.
தோளா மணி - துளைக்கப்படாத மணி. சிவனது திருமேனி உயர்ந்த மாணிக்க மணியின் நிறமும் ஒளியும் உடையதாகலின் “தோளா மணிநேர் வடிவழகர்” எனக் கூறுகிறாள். நெய்தற் கானல் சோலைகளை யுடையதாதல் பற்றித் திருவொற்றியூரைச் “சோலை சூழ்ந்த ஒற்றியூர்” என்று சிறப்பிக்கின்றாள். மாளல் - இறத்தல். சிவன் பிறப்பிறப் பில்லாத பெருமை யுடையவனாதலால் “மாளா நிலையர்” என்றுரைத்து மகிழ்கின்றாள். மாலையிட்டு மணந்த கணவன் மருவியின்பம் செய்யாமை நன்றன்று என்பதுபற்றி “என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண்” என வுரைக்கின்றாள். அதுகேட்டு முகம் சுளித்து வேறு திசை நோக்கிய தோழியைத் தன் முகம் நோக்குவித்துத் தன் சொற்களைக் கேட்பிக்குமாறு புலப்பட, “கேளாய் மாதே” எனக் கூறுகிறாள். மாது - அன்புடையவள். கெடுவ, கேடு விளைவிக்கும் குற்றம் குறித்து நின்றது. சிவபிரான் மீள வந்து கூடாமைக்குக் காரணம் தன்பால் குற்றமிருந்தது என்றும், அதனை யெவரேனும் கண்டறிந்து கோட் சொல்லி யிருப்ப ரென்றும், அவரை அணுகிக் கோளுரைத்து அவர் கருத்தை மாற்றுவார் பிறர் எவருமில்லை யென்று நினைந்தும், “கோளார் உரைப்பார்” என்று கூறுகின்றாள். (28)
|