1754.

     தாவென் றருளு மொற்றியுளீர்
          தமியேன் மோக தாகமற
     வாவென் றுரைப்பீ ரென்றேன்பின்
          வருமவ் வெழுத்திங் கிலையென்றார்
     ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ
          தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய்
     ஆவென் றுரைத்தா ரென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      இஃது ஈற்றடியில் சிறு வேறுபாடுற்று முழுதும் ஒத்து இங்கித மாலையில் (1842) காணப்படுகிறது. உரையும் விளக்கமும் ஆண்டுக் காண்க.

     (27)