492.

    பிரிய மேயவன் மடந்தையர் தங்களைப்
        பிடித்தலைத் திடுவஞ்சக்
    கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக்
        கருணையு முண்டேயோ
    அரிய மாலய னிந்திரன் முதலினோர்
        அமருல கறிந்தப்பால்
    தெரிய வோங்கிய சிகரிசூழ் தணிகையில்
        தேவர்கள் தொழும்தேவே.

உரை:

     சூரியன் தேரிற் பூட்டிய வானக் குதிரைகளின் காற் குளம்புகளைத் தாக்குதலால், மூங்கில்களின் மணி வகையில் ஒன்றாகக் குறிக்கும் முத்துக்கள் எத்திசையும் சிதறி வீழும் நல்ல வளமிக்க திருத்தணிகையில் எழுந்தருளித் தேவர்கள் வந்து தொழ விளங்கும் தேவனாகிய முருகப் பெருமானே, எதிர்ந்தாரைத் தாக்கும் வேல் போன்ற கண்களை யுடைய மகளிரின் மலமொழுகும் குழியாகிய உபத்தத்தின்கண் வீழ்ந்தாழ்ந்து வருந்துகிற ஊனில்லாத வலிய எலும்பைக் கடிக்கும் நாயினும் கடைப்பட்ட நாயாகிய எனக்கு உனது திருவருட் பேறு எய்துமோ என அஞ்சுகிறேன்; அருள் புரிக, எ. று.

     மூங்கிற் கணுக்களில் தோன்றும் முத்துக்களையும் மணிவகையுள் ஒன்றாகக் குறித்துப் புலவர்கள் புகல்வது பற்றிக் “குறிக்கும் வேய்மணிகள்” என வுரைக்கின்றார். கதிர் - சூரியன். இரதம் - தேர். வானத்திற் செல்வது பற்றிச் சூரியனது தேர்க் குதிரைகளை “வான் குதிரை” என்று சிறப்பிக்கின்றார். புடைத்து, புடைத்தலால்; வினையெச்சம் காரணப் பொருளில் வந்ததாம். மறித்தல் - எதிர்தல். உபத்தத்தை (பெண்ணுறுப்பை) மலக்குழி யென்பது, வெண்மையான வழும்பு ஒழுகுவது பற்றி, வன்றசையறும் என்பு என்றவிடத்து, வன்மையை எனபுக் கேற்றுக. கறித்தல் - கடித்தல்.

     இதனால், மகளிர் மலக் குழியில் வீழ்ந்து வருந்துவோர்க்கு முருகன் திருவருள் கிடைப்ப தரிதெனத் தெரிவித்தவாறாம்.

     (3)