496. சந்தார் வரையுட் சிந்தா மணிநேர் தணிகேசர்
மந்தா நிலமே வுந்தார் மறுகில் மயிலேறி
வந்தார் நிலவோர் செந்தா மரையின் மலர்வாசக்
கொந்தார் குழலென் னிலையுங் கலையும் கொண்டாரே.
உரை: தோழி, கங்கையையும் பிறைத் திங்களையும் கொண்டிருக்கும் சடையை யுடையவரும், சொல்லப்படுகின்ற திருமாலும் பிரமனும் துதிக்கும் ஐந்து முகங்களை யுடையவருமான சிவபெருமானுக்கு மகனாகிய முருகப் பெருமானார் தன்னைப் பரவிப் பணிபவர்க்கு மிக்க புகழையும் நிதிகளையும் ஊர்களையும் அம்மை யின்ப வாழ்வுக்குரிய பிறப்பையும் நல்குபவராயின், நெடிய வேலையுடைய அவர், தாம் இவரும் மயிலின் மேல் வரும் வழியைச் சொல்லுக, எ. று.
நதி - கங்கை. மதி - பிறைச்சந்திரன். பொதிதல் - இருக்க வைத்தல். திருமாலும் பிரமனும் தமது தொழில் இனிது நடைபெறும் பொருட்டு முப்போதும் சிவனை வணங்கி வழிபடுவர் என்று புராணங்கள் ஓதுவதால், “நவின் மாலும் விதியும் துதி ஐம்முகனார்” என்று சிவனைக் குறிக்கின்றார். படைக்கும் தெய்வமாதல் பற்றிப் பிரமனை “விதி” என்கின்றார். முகம் ஐந்தாவன; ஈசானம், தற்புருடம், வாமம், சத்தியோ சாதம், அகோரம் என்பன. கங்கையும் திங்களும் தங்குதற்கு முடிச் சடையைத் தந்தும், திருமால் முதலியோர்க்குத் தொழில் தந்தும் சிவன் அருளுவது போல அவருடைய மகனாகிய முருகப் பெருமான் தன்னை நினைந்து அடி பணிவார்க்கு நிதியும் பதியும் கதியும் கொடுப்பவராதலால், நினக்கும் வேண்டுகிற நலம் தருவர் வருந்த வேண்டா எனத் தோழி வற்புறுத்தினாளாகக் கையில் ஏந்திய வேலுடன் மயிலிவர்ந்து அவர் வரும் வழியைக் கூறுக; அதனை நோக்கி யாம் ஆறுதல் பெறலாம் என்பாளாய், “வரும் ஆறு மலர்க” என மொழிகின்றாள். மலர்தல் - சொல்லுதல்; திருவாய் மலர்தல் என்பது போல. நிதி - செல்வம்; சங்கநிதி பதுமநிதி என்றுமாம். மிகுசீர் - மிக்க புகழ். செய்தார் இறப்பினும் செய்த புகழ் நிலைபெறுதல்
பற்றி, “மிகுசீர்” எனப்படுகிறது. இனித் தொல்காப்பியம் கூறுவது போலச் சீர்த்தி யெனினும் அமையும். கீர்த்தி, வடசொல்; தமிழினின்றும் வடமொழியிற் புகுந்த தென்பர். நல்லவர்க்கு ஊர்கள் வழங்குவது பண்டை நாளைச் செல்வர் மரபு. சீரும் நிதியும் பிறவும் தருவார் என்பது தோழி கூற்றகைக் கொண்டெடுத்து மொழிவது. எப்போது எங்கே வேண்டினும் செல்லுதற் பொருட்டு அடிக் கீழிருப்பது பற்றி முருகனுடைய மயில், “வதியும் மயில்” எனப்படுகிறது. வரும் வழி கூறுவது இனிய நல்ல மொழியாதலால், “மலர்க” என அன்பால் உரைக்கின்றாள். இதனைத் தொல்காப்பியம், “உயர் மொழிக் கிளவி” எனக் குறிக்கிறது.
இதனாற் பெருந்திணை நங்கை முருகப் பெருமானது இயல் நலங் கேட்டு அவன் வரும் திறம் வினாவியவாறாம். (4)
|