528. ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
டாறு புயந்திகழ் அற்புதமும்
வீறு பரஞ்சுடர் வண்ணமுமோர் - திரு
மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
உரை: இரண்டு ஆறு புயம் - பன்னிரண்டு தோள்கள். வீறு பரஞ்சுடர் - நிகரில்லாத மேலான ஒளி. வெள்வளை - வெள்ளை நிறமுடைய சங்கு வளையல் அணிந்த பெண்கள். (6)
|