532. சச்சிதா னந்த வுருவாண்டி - பர
தற்பர போகம் தருவாண்டி
உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
உத்தம தேவனைப் பாடுங்கடி.
உரை: சத்து, சித்து, ஆனந்தம் என்ற மூன்று சொற்கள் சேர்ந்தது 'சச்சிதானந்தம்' என்பது. சத்து - மெய்ம்மை; சித்து - அறிவு; ஆனந்தம் - இன்பம். நிலையான ஞான வின்ப உருவுடையன் என்பதற்குச் “சச்சிதானந்த உருவாண்டி” என்று சொல்லுகிறார். தற்பர போகம் - தத்துவங்களாகிய கருவி கரணங்களால் நுகரும் இன்பத்தினும் மேலான ஞானானந்தமே யுருவாகிய பரம்பொருட் போகம். உச்சி - தலை. (10)
|