533. அற்புத மான அழகனடி - துதி
அன்பர்க் கருள்செய் குழகனடி
சிற்பர யோகத் திறத்தனடி - அந்தச்
சேவகன் சீர்த்தியைப் பாடுங்கடி.
உரை: அற்புதம் - எங்கும் காணப் படாதது; தோன்றாதது என்றுமாம். குழகன் - இளையவன். சிற்பர யோகத் திறத்தன்: யோகம் - கூடுதல். ஞான மயமான பரம்பொருளோடு கூடுவது சிற்பர யோகம், அது, கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், சுத்தாத்துவிதம் எனப் பல திறப்படுதலால், “சிற்பர யோகத் திறத்தன் அடி” என்கின்றார். சேவகன் - காப்பவன்; சேவை செய்பவன் என்றுமாம். (11)
|