542. செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வ ராயரே வாரும்
எங்குரு நாதரே வாரும்.
உரை: செங்கல்வராயர் - செங்கல் வரையர் என்பதன் மரூஉ. சிவப்பு நிறமுடைய கற்கள் நிறைந்த மலை என்பது பற்றி இப்பெயர் வந்தது. இனி, செங்கலம் என்பது செங்கழு நீர் எனக் கொண்டு செங்கழுநீர்க் குன்றம் என்பது செங்கலவரை என்றாகி, அங்குள்ள முருகப் பெருமானுக்குச் செங்கல்வரையன் என்ற பெயர் வந்தது என்பதும் உண்டு. கழுநீர் மலரும் குன்றம் என்பது பற்றி இதனை அப்பர் சுவாமிகள், “கன்மலிந்த கழுநீர்க் குன்றம்” (புறம்பயம்) எனக் கூறுவது காண்க. (5)
|