546. சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
தேவர்கள் தேவரே வாரும்
மூவர் முதல்வரே வாரும்.
உரை: சின்னம் - திருக்கோயில்களில் விடியற்காலையில் ஊதுகின்ற ஓர் இசைக்கருவி. இது வாய்ப் பக்கம் சிறுத் திருத்தலின் சின்னம் எனப்படுகிறது. இதனை மங்கலத் தாரை என்பது முண்டு. மூவர் - அயன், திருமால், உருத்திரர். (9)
|