மூன்றாம் திருமுறை

இரண்டாம் தொகுதி

1964.

  ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
பேறு மிகத்தான் பெரிது.

2

உரை:

ஆறுமுகங்களையுடைய முருகன் திருவருள் எய்துமாயின், எல்லாவகையான பேறுகளும் மிகப் பெரிதும் உண்டாம். எ. று

பெறக்கடவ பேறுகள் மிகப்பலவாதலின், எல்லாம் அடங்க “எல்லாப் பேறும்” என்று கூறுகின்றார். வேண்டிய அளவிற்கு மேலாகப் பெறப்படும் என்பது விளங்க. “மிகத்தான் பெரிது” என விளம்புகின்றார். தான், அசை.

(2)