2434. பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்
பேசப் படாத பெரிய மருந்து
இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
என்று மதுரித் தினிக்கு மருந்து. நல்ல
உரை: இன்ன தன்மையது என்று எடுத்துக் கூற வொண்ணாததாகலின், பரம்பொருளாகிய சிவனை, “யார்க்கும் பேசப்படாத பெரிய மருந்து” என்று உரைக்கின்றார். “இன்ன தன்மையன் என்றறியொண்ணா எம்மான்” (ஆரூர்) என நம்பியாரூரர் கூறுகின்றார். மதுரித்து இனிக்கும் - மிகவும் இனிக்கும், மதுரித்தல், மதுரம் என்னும் சொல்லடியாக வந்தது; உபயோகம், உபயோகித்தல் என வருவதுபோல. (4)
|