2436. புத்தமு தாகு மருந்து - பார்த்த
போதே பிணிகளைப் போக்கு மருந்து
பத்த ரருந்து மருந்து - அநு
பானமுந் தானாம் பரம மருந்து. நல்ல
உரை: புத்தமுது - புதிய அமுது; உண்ணும்போதெல்லாம் புதுப் புதுச் சுவை நல்குவது. பிணி - நோய். உயிரைப் பிணித்திருக்கும் மலங்கள் எனினும் பொருந்தும். பிணிப்பது, பிணி. அநுபானம் - மருந்துண்பவர் பின்னர்ச் சாப்பிடுவது. (6)
|