2437.

     மாலயன் தேடு மருந்து - முன்ன
          மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
     காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
          காணுங் கனவினுங் காணா மருந்து. நல்ல

உரை:

     மார்க்கண்டன் பொருட்டுச் சிவலிங்கத்தினின்றும் தோன்றியதுபற்றி, “மார்க்கண்டரைக் காக்க வந்த மருந்து” என்று கூறுகிறார். காலன் - இயமன். சாய்த்தல் - வீழ்த்துதல்.

     (7)