2438. தற்பர யோக மருந்து - உப
சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
சிற்பர யோக மருந்து - உயர்
தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து. நல்ல
உரை: தற்பர யோகம் - தானே தனிப் பொருளாகிய சிவத்தோடு நினைவால் ஒன்றுதல். சிற்பர யோகம் - பரஞானத்தால் பரத்தோடு நினைவால் ஒன்றுதல். உபசாந்தர் - சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்து ஆங்கே குருமுதல்வனாற் காட்டப் பெறும் ஞானப் பேற்றில் திளைக்கும் நிலையில் இருப்பவர். “கூறாத சாக்கிராதீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழ் உபசாந்தமே” (திருமந். 2509) என்பதறிக. (8)
|