2439.

     அம்பலத் தாடு மருந்து - பர
          மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
     எம்பல மாகும் மருந்து - வேளூர்
          என்னுந் தலத்தி லிருக்கு மருந்து. நல்ல

உரை:

     அம்பலம் - தில்லைப் பொன்னம்பலம். பரமானந்த வெள்ளம் - சிவானந்தப் பெருக்கு. பலம் - பலமான துணை; ஞான பலம் என்றுமாம். வேளூர் - வைத்திய நாதப் பெருமான் கோயில் கொண்டருளும் புள்ளிருக்கு வேளூர்.

     (9)